Sunday 5th of May 2024 08:01:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒலியை விட 9 மடங்கு வேகமான ஹைபர்சொனிக்  ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷ்யா!

ஒலியை விட 9 மடங்கு வேகமான ஹைபர்சொனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷ்யா!


ஒலியை விட 9 மடங்கு வேகமாக சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் சிர்கான் (Zircon) என்ற அதிநவீன ஹைபர்சொனிக் சீர்வேக ஏவுகணையை (hypersonic cruise missile) வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷ்யா நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.

ரஷ்யாவில் இராணுவத்தை பலப்படுத்த இந்த புதிய தலைமுறை ஹைபர்சொனிக் ஏவுகணை முக்கிய பங்காற்றும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஆர்டிக்கில்லில் உள்ள வெண் கடலில் நிலைநிறுத்தப்பட்ட அட்மிரல் கோர்ஸ் கோ கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர்கான் ஏவுகணை 350 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிர்கான் ஏவுகணையானது ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபர் மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிறந்தநாளில் சிர்கான் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE